இறந்தோரின் பிறந்தநாளை

வஞ்சிவிருத்தம்

இறந்தோரின் பிறந்தநாளை கொண்டாடும்
சிறந்தோர்கள் நிறைவாழும் நாடிது
மறந்துமே விடமாட்டார் இறைந்தநாளை
கறந்தபால் காம்பேற்றும் வகையிலே (க)

அறிவார்ந்த செயலாகுமே இந்நிகழ்வு
மறையோதி இறைவனை துதித்தல்
குறையறிவு என்றே போதித்த
நிறைமதி கொண்டோரில் கொள்கையிது (உ)

தவறிழைக்கும் மறையோதி திருடருக்கு
புவனமே வியக்கும் தண்டனையை
கவனமாய் தந்திட வக்கில்லா
அவனியாளும் அரசியலரின் கூப்பாடிது (ங)

பரணி முழுவதும் நிறைந்த
உருவம் இல்லா உணர்வால்
மருந்தைக் கொடுக்கும் இறைவனை
புரியாத குறைமதியோர் வேந்தராய் (ச)

கதிரவன் வெம்மையால் மேகங்கள்
விதையுண்ணும் பறவையால் காடுகள்
புதையுண்ட பொருட்களே கனிமமாய்
சிதைவை தருவோரே இறைவளர்ச்சியில் (ரு)
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (13-Jun-22, 6:48 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 23

மேலே