வெறுத்தாலும்

வெளிவிருத்தப் பா

மாதவம் செய்தவர் மட்டுமே பிறப்பெடுப்பர் - இங்கே!
பாதகம் செய்திருப்பின் இல்லையே பிறப்பதுவும் - இங்கே!
வேதமும் மருத்துவமும் அரியபிறப்பை எடுத்தது - இங்கே!
சோதனையை வென்றுவாழும் தமிழுமே பிறப்பெடுத்து - இங்கே! -- (க)

எரிவதைத் தவிரவே எதுவுமே தெரியாத - நெருப்பே!
கரியெனவே எவற்றையும் எரித்தபடி செல்கிறாய் - நெருப்பே!
அரியதையும் சூழ்ந்தடர்ந்தே பொறுமையாய் எரித்திடும் - நெருப்பே!
பெரியதாயின் சிறியதாயின் எவற்றையும் எரிப்பாயோ - நெருப்பே! -- (உ)

பிறந்துவிட்ட உயிருக்கு இறுதியிலே பிறிந்துவிடும் - உயிராம்!
இறந்துவிட்ட உடலினுள் எப்போதும் சேர்க்கமுடியாது - உயிராம்!
வெறுத்தாலும் உடலினை அடித்தாலும் விலகாதது - உயிராம்!
பறந்திடுமோ விலகியே நடந்திடுமோ காற்றொத்த - உயிராம்! (ங)

இறைகுறி அணிந்து தினமுமே மனமுழுதும் - இறைந்து!
மறையென ஒன்றை எல்லோரும் குழுவாய் - இறைந்து!
குறைகளை திருத்தாமல் தொடர்ந்து இறைவனை - இறைந்து!
மறுப்பதால் பயன்தருமோ இறைவனை சிறந்தபடியே - இறைந்து! (ச)
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (13-Jun-22, 6:06 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 35

மேலே