எந்த அதிகாரி உங்க வீட்டில் இருக்காரு

எந்த அதிகாரி உங்க வீட்டில் இருக்கிறாரு?
######@
காவலர்: யாரும்மா வீட்டில்? வெளில வாங்க?
#####
எனுங்க? எதுக்கு கூப்புட்டீங்க?
#####
இந்த வீட்டில் எந்த அதிகாரி தங்கிட்டு இருக்கிறாரு? அடிக்கடி அதிகாரினு நீங்க சொல்லறத நானும் கேட்டிருக்கிறேன். ஐயாவும் (ஆய்வாளரும்) கேட்டிருக்கிறார். அதைப் பத்தி சொல்லுங்கம்மா.
#######
எங்க மகன்தான் அதிகாரி.
#######
அவர் என்ன அதிகாரி? வருவாயத் துறையா? நிர்வாகத் துறையா? எந்தத் துறையில் உங்க மகன் அதிகாரி?
########
எங்க அதிகாரிக்கு அஞ்சு வயசுதான் ஆகுதுங்க.
#######@
என்னது? அதிகாரியோட வயசு அஞ்சா? என்னம்மா சொல்லறீங்க. யாரோ அதிகாரி இங்க தங்கிட்டு இருப்பாரு. அவருக்கு துப்பாக்கி ஏந்திய காவலர் இரண்டு பேரை உங்க வீட்டுக்கு அனுப்பலாம்னு இருந்தோம். சரி. உங்க பையனை ஏன் அதிகாரினு கூப்படறீங்க?
########
எங்க பையன் பேரு 'அதிகாரி'ங்க.
#####
எதுக்கு 'அதிகாரி'னு பேரு வச்சீங்க?
########
வட மாநிலங்களில்ல நெறையப் பேரு அவுங்க பேருக்குப் பின்னாடி 'அதிகாரி'ங்கிற பேரை வச்சுக்கிறாங்களாம். என்ற வீட்டுக்காரர் சொன்னாருங்க. வித்தியாசமான இந்திப் பேரா இருக்கட்டுமேனு தவமிருந்து பெத்த எங்க பையனுக்கு 'அதிகாரி'னு பேரு வச்சுட்டோமுங்க.
#######
சரி. சரி. நான் வர்றேன்.

எழுதியவர் : மலர் (16-Jun-22, 6:29 pm)
சேர்த்தது : மலர்1991
பார்வை : 70

மேலே