தங்கை பேரு அக்கா - அண்ணன் பேரு

என்னடா தம்பி உங்க பக்கத்து வீட்டு அக்கா
"அக்கா, அக்கா எங்க போயிட்ட. சீக்கிரம் வா"னு கூப்புட்டாங்க. ஒரு சின்ன பொண்ணு ஓடி வருது. நான் அந்த அக்காவை விட வயசில் மூத்த பெண் வரும்னு பார்த்தேன். என்னடா ஒண்ணும் புரியல.
######
அண்ணே அந்தப் பொண்ணுப் பேரு 'அக்கா'.
#######
என்ன அநியாயம்டா? அந்த பொண்ணுக்கு மூணு வயசுதான் இருக்கும். அதைப் போயி அக்கானு பெத்த தாயே கூப்பிட்டாங்க?
**********
அவுங்களைத்தான் கேட்கணும்.
######
சரி அந்தப் பொண்ணுக்குக்கு அண்ணன்இருக்கிறானா?
#####
ஆமாம். ஐந்தாம் வகுப்புப் படிக்கிறான். அவனோட தங்கை அக்கா இரண்டாம் வகுப்பு மாணவி.
#########
தங்கை பேரு 'அக்கா'னா அண்ணன் பேரு 'தங்கை'யா?
#######
இல்லண்ணே. அண்ணன் பேரு 'அக்கு'. என்னடா இது அக்கா, அககு.‌ எங்கிருந்துடா இந்த மாதிரி பேருங்களக் கண்டுபிடிக்கிறாங்க.
########@@#@@@@@@@@###############

Akka = old lady, wise. Feminine name. Finnish origin.
Akku = embrace. Masculine name. English, Hebrew, Indian origin.

எழுதியவர் : மலர் (17-Jun-22, 9:58 pm)
சேர்த்தது : மலர்1991
பார்வை : 101

சிறந்த கவிதைகள்

மேலே