காயங்கள்
உடலின் காயங்களை
மருந்தினை கொண்டு
சரி செய்ய இயலும்...!!
ஆனால்...
மனதின் காயங்களை
மாயங்கள் செய்தும்
மாற்ற முடியாது
மருந்து கொண்டும்
சரி செய்ய இயலாது...!!
காலங்கள் செல்ல செல்ல
காயங்கள் மெல்ல மெல்ல
மனசுக்குள் கரைந்து விடும்
தெளிவு பிறந்து விடும்....!!
--கோவை சுபா