மௌனத்திற்கு ஒரு கவிதை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*மௌனத்திற்கு ஒரு கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*மௌனம்*
அமைதியின்
பிறப்பிடம்....
அறிவின்
இருப்பிடம்....
பல சமயங்களில்
சம்மதத்துக்கான
பச்சைக்கொடி....
சில சமயங்களில்
எதிர்ப்புக்கான
கருப்புக்கொடி.....
ஒருநாள் இருந்தால்
விரதம்.....
ஒவ்வொரு நாளும்
இருந்தால் குரோதம்....
காதலியிடமிருந்தால்
அழகு......
மனைவியிடமிருந்தால்
ஆபத்து...
தொடாமலே
சுடும் நெருப்பு....
படாமலேயே
காயப்படுத்தும் கத்தி...
கோபநீதிமன்றத்தில்
வழங்கப்படும்
அதிகபட்சத் தண்டனை....
மனம் ஞானம் பெற
அமரும் போதிமரம்.....
இதழ்களின்
ஓய்வு நேரம்.....
மொழிப்பெயர்க்க முடியாத
ஒரு மொழி....
வார்த்தைகளால்
விவரிக்க முடியாத
ஒரு சொல்....
மலரை விட
மென்மையானது.....
இருப்பினும்
இடியை விட
வலிமையானது.....
*கவிதை ரசிகன் குமரேசன்*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷