உண்மை

உண்மை.
ஒரு ஆயிரம் அணுக்களைவிட
சக்தி வாய்ந்தது.ஒடுக்கவும் முடியாது ; அதை
ஒழிக்கவும் முடியாது.
உண்மை.
ஒரு தீப்பிழம்பு.
பொய் இருட்டுக்களை வாரி இறைத்து
அணைத்துவிட முடியாது ;
அழித்துவிட முடியாது.
உண்மை.
அது கசக்கும்.
துன்ப மாயை தரும்.
அதன் மெய்ப்பொருள்
பேரின்பம் தரும்.
உண்மை
அது கடவுளின் பிம்பம்.
உண்மையுடையவன்
கடவுளுடையவன்.