அறுந்த பூங்கொடி
நேரிசை வெண்பா
ஊடலுடைத் துண்மைப் புரிய விளக்கியவர்
கூடத் தயக்கமென் சொல்லுமின் --- பூடகமென்
வாடவள்ளி நீர்பாய்ச்சா காய்கதி ரோன்முன்னே
போட வடிவறுத்தல் போல்
தன்னுடன் ஊடல் கொண்ட மனைவிக்கு அவள் ஊடலைத் தெளிவுபடுத்தி, அவளுடன்
கூடாமல் போவது, முன்பே நீர் இல்லாமல் வாடிய கொடியை அடியோடு அறுத்தது போலாம
காமத்துப்பால் குறள் 4/23 வதுப்பாடல்
..........

