ஈசனே போற்றி பாகம் 10

அம்புலிக்கு சாபம் நீங்க, சிரத்தில் இடத்தை தந்தவன்.
இராவணன் இசைக்கு மகிழ்ந்து, நடனம் ஆடி ரசித்தவன்.
போரின் மூலம் பார்தனுக்கு, அஸ்திர ஞானம் தந்தவன்.
ஏற்றிய பாடலின் குறையை மன்னித்து, ஏற்றுக் கொள்வாய் என் ஈசனே.

பெற்ற ஞானம் போதவில்லை, புரிந்து கொள்ள உன்னையே.
புரிந்து கொள்ள முயற்சி விடுத்து, ரசிக்கிறேன் நான் உன்னையே.
மகிமை உனது உணர்ந்த நானோ, மகிழ்கிறேன் உன் நினைவிலே.
எல்லையற்ற இன்பம் இதுவே, அனுபவித்து மகிழ்கிறேன்.

இசையை கொண்டு மலையை உருக்கும், அகத்தியர் உன் பக்தர் தான்.
பத்து கலையில் தேர்ச்சி பெற்ற, இராவணன் உன் பக்தர் தான்.
வாழ்வில் தோல்வி கண்டிராத, சோழனும் உன் பக்தர் தான்.
மகத்துவம் குலத்தில் இல்லை, பக்தர் கதைகள் சொல்லுவதே.

ஏற்ற தாழ்வு இன்பம் துன்பம், எதுவும் உன்னை தீண்டுமோ.
பக்தர் காட்டும் பாசம் மட்டும், உன்னை வந்து சேருமோ.
லிங்க வடிவில் உன்னை கண்டும், உருகாத மனமும் இருக்குமோ.
உந்தன் நாமம் செவியில் ஒலித்தால், என் ஆத்மா உன்னை சேருமோ.

எழுதியவர் : Vignesh (19-Jun-22, 6:59 pm)
சேர்த்தது : Vignesh
பார்வை : 17

மேலே