ஈசனே போற்றி பாகம் 11
துன்பம் என்னை வாட்டும் பொழுது, மனதை இருளும் சூழுதே.
இழந்த சோகம் மனதை கீர, இன்பம் எங்கோ மறைந்ததே.
மேனி பிணியைய் போக்கும் மருந்தும், மனதின் காயம் போக்குமோ.
காணும் பொருளில் நினைவும் சேர்ந்து, சோகம் மேலும் வளர்ந்ததே.
உன்னை கண்டால் காயம் ஆரும், என்ற செய்தி கேட்டதும்,
லிங்கமாக அமர்ந்து அருளும், காட்சி கண்ட கண்களும்.
இமைகள் மூடாமல் மனதில் நிரப்பி, பற்றினேன் உன் பாதத்தை.
அந்த நிமிடம் கவலை மறந்தேன், என் கண்ணீரே அதன் ஆதாரம்.
பஞ்ச பூதம் சேர்ந்த ஒன்றை, இழந்தேன் என்று எண்ணினேன்.
சேர்த்து பிடித்த ஆறாம் பொருளை, உணர ஏனோ நான் மறந்தேன்.
பக்குவம் மாறிய ஈசனின் அம்சம், நமக்குள் இருக்கும் போதிலே.
எதை இழந்தேன் என்று உணர்ந்து, மனதை சாந்தப் படுத்தினேன்.
என்னுள் இருந்து எழுத வைத்து, உன்னுள் இருந்து ரசிக்கிறார்.
ஞானம் பெற்று பழுத்த பின்பு, தனக்குள் சேர்த்து விடுகிறார்.
மனித வாழ்வின் இன்பம் துன்பம், ஞானம் பெறும் வழிகளே.
ஞானம் தந்து மார்கம் காட்டும், ஈசன் எமக்கு குரு ஆவார்.