ஈசனே போற்றி பாகம் 12
துன்பம் விலக்கி நன்மை நல்கும் தெய்வம் எங்கள் ஈசனே.
பாவ கணக்கை நீக்கி எமக்கு மோட்சம் நல்கும் நாதனே.
காண உன்னை வந்த எமக்கு வழியை காட்டும் ஈசனே.
லிங்க வடிவில் உன்னை கண்டு புனிதம் ஆகும் ஜீவனே.
உன் மேல் பக்தி கொண்டவர்க்கு சோதனைகள் சேருமாம்.
ஈசன் தேர்வு கடினம் மற்றும் உறுதி தளர வைக்குமாம்.
குருவாய் இருக்கும் ஈசன் என்தன் அப்பன் ஆன போதிலே.
கற்றுத்தந்து வீழ்ந்தால் தாங்க, ஈசன் இருக்க ஐய்யமா.
திசைகள் காணா கடலில் மிதக்கும் படகின் நிலை தான் என்னதும்.
கவலை நிறைந்த சோர்வை தழுவும் தருணம் வந்த போதிலும்.
ரவியும் நிலவும் வழியை காட்ட கைகள் துடுப்பாய் ஆனதே.
இந்த ஞானம் தந்து எமக்கு சக்தி தந்த சிவமயம்.
புலியை கொடியில் கொண்ட வேந்தன் எழுப்பும் பிரகதீஸ்வரா.
மீன் பறக்கும் மதுரையிலே அருளும் சுந்தரேஸ்வரா.
வீணைக்கொடியோன் பாடலுக்கு, ஆடிய பைஜ்நாதனே.
சூரிய கொடியைக் கொண்ட ராமன் துதித்த ராமேஸ்வரா.
சிவனை உணர்ந்த பக்தருக்கு அபயம் அந்த ஈஸ்வரா.
ஞானம் தந்து புனிதம் ஆக்கும் தக்ஷிணாமூர்த்தியே.
உடலின் முடிவு பஸ்பம் என்று உணர்த்தும் கபாலீஸ்வரா.
உன்னை சேர ஏங்கும் பிள்ளைக்கு அருளும் எம் மகேஸ்வரா.