பேசு பேசு
பேசு பேசு;
தமிழா, பேடி இல்லை நீ !
தமிழில் பேசு;
நன்றாய் தமிழ் பேசு;
தமிழன் என்ற செருக்குடன் பேசு;
தமிழால் ஒன்று பட பேசு;
தன்மானம் காக்க பேசு;
உன் தாய் மொழியாம் தமிழ் பற்றுடன் பேசு;
பேசு பேசு பேராவலுடன் பேசு;
பேசு பேசு பேசாமல் பேசு;
மவுனமாய் பேசு
நீயாய் பேசு;
நிதானமாய் பேசு;
நிலை குலையாது பேசு;
வேதனை இன்றி பேசு;
நேர்மையாய் பேசு;
நேரத்தை வீணடிக்காது, நேர்த்தியாய் பேசு;
நெஞ்சை நிமிர்த்தியே பேசு;
நெறியுடன் பேசு;
நேசித்தே பேசு;
நாக்கில் நரம்பு இல்லாமல் பேசாதே;
அன்பாய் பேசு;
அழகாய் பேசு;
அடக்கத்துடன் பேசு;
அர்த்தத்துடன் பேசு;
அசிங்கம் இன்றி பேசு;
அகந்தை இன்றிபேசு;
அரக்கத்தனம் இன்றி பேசு;
அசடு வழியாது பேசு;
அறிவாய் பேசு;
அனர்த்தம் இன்றி பேசு;
அதிகாரம் இன்றி பேசு;
அகங்காரம் இன்றி பேசு;
அளவாய் பேசு;
அலச்சியம் இன்றி பேசு;
இலட்சியத்துடன் பேசு;
அடிமைச் சங்கிலியை உடைத் தெரியவே பேசு;
பேசு பேசு;
ஆதிக்க வர்க்கத்தை எதிர்த்து பேசு;
அடக்கு முறையை தடுக்க பேசு;
அடங்கி போகாமல் இருக்க பேசு;
ஆதரவாய் பேசு;
ஆணவம் இன்றி பேசு;
ஆசையாய் பேசு;
ஆதாரத்துடன் பேசு;
ஆக்ரோஷம் இன்றி பேசு;
ஆன்மிகத்தை பேசு;
ஆணவம் இன்றி பேசு;
இனிமையாய் பேசு;
இலகிய மனதுடன் பேசு;
இயல்பாய் பேசு;
இரக்கத்துடன் பேசு;
இலக்கிய ரசனையுடன் பேசு;
இரகசியமாய் பேசு;
இடம் ஏவல் அறிந்து பேசு;
இறுமாப்பு இன்றி பேசு;
ஈடுபாடுடன் பேசு;
உண்மையை பேசு;
உள்ளதை உள்ளபடி பேசு;
உள்ளத்திலிருந்து பேசு;
உணர்ச்சியுடன் பேசு;
உற்சாகமாய் பேசு;
உயர்வாய் பேசு;
உரக்கப்பேசு;
உருக்கத்துடன் பேசு;
பிறர் உறங்கும் படி பேசாமல் பேசு;
ஊக்கத்துடன் பேசு;
எரிந்து விழாது பேசு;
கூர்படப் பேசு
குணிந்து போகாது இருக்கவே
தலை நிமிர்ந்து பேசு;
கருத்துடன்பேசு;
கவனமாய் பேசு;
கனிவுடன் பேசு;
கம்பீரமாக பேசு;
கலக்கம் இன்றி பேசு;
கலங்கம் வாராது பேசு;
தன்மையாய் பேசு;
தன் நம்பிக்கையோடு பேசு;
தடுமாற்றம் இன்றி பேசு;
தன்மையுடன் பேசு;
தயக்கம் இன்றி பேசு;
தரத்துடன் பேசு;
தராதரம் பார்த்து பேசு;
பன்பாய் பேசு; பார்த்துப் பேசு;
பயம் இல்லாமல் பேசு;
பணிவுடன் பேசு;
பற்றுடன் பேசு;
பயப்படாமல் பேசு;
பக்குவமாய் பேசு;
பகுத்தறிவோடு பேசு
பிரியமாய் பேசு;
பிழை இன்றி பேசு;
சமயம் அறிந்து பேசு;
சபை அறிந்து பேசு;
சிந்தித்து பேசு;
சிரிப்பாய் பேசு;
சினம் இன்றி பேசு;
சிறப்பாய் பேசு;
சீரழிக்காது பேசு;
சீற்றம் இன்றி பேசு;
திடமாய் பேசு
திட்டமிட்டு பேசு
மகிழ்ச்சியுடன் பேசு;
மனம் கோனாதவாரு பேசு;
மறக்காமல் பெற்றோர்களிடம் பேசு;
மகத்தான சாதனை படைக்க பேசு;
மதப் பாகுபாடு இன்றி பேசு;
மனிதாபி மானத்தோடு பேசு;
மறுக்காமல் உறவுகளுடன்
பாசத்தோடு பேசு;
முகம் சுளிக்காது பேசு;
நேர்த்தியாய் பேசு;
நன்றே பேசு;
நல்லதை பேசு;
நால்வருக்கு நல்லது நடக்க பேசு;
தெளிவாய் பேசு;
தெளிந்த சிந்தனையுடன் பேசு;
வீர தீர சாகசத்தை பேசு;
வெருக்காமல் பேசு;
வெளிப்படையாக பேசு;
பொருத்தே பேசு;
பொறாமையின்றி பேசு;
நொந்து போகாமல் இருக்கும் படி பேசு;
கண்ணீர்த் துளிகளால் பேசு;
கவலையை மறைக்க சிரித்தே பேசு;
வியந்திடும் படி பேசு;
வீர முழகத்துடன் பேசு;
வீம்பு பேசாது பேசு; விவேகத்துடன் பேசு
வேண்டாதது பெறுமை பீத்தல் தற்பெருமை பேச்சி;
பேசு பேசு தமிழா நீ பேசு;
தன்மானம், உன் இன மானம்
காத்திடவே நேருக்கு நேர் பேசு;
நேர்த்தியாய் பேசு;
தேச பக்தியுடன், நேசத்துடன் பேசு;
தமிழ் பேசு தமிழ் பேசு;
தடுமாறாமல் தமிழா தமிழை நேசித்து பேசு;