கடலை - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
கடலைவயி றூதல் கனல்தாகஞ் செய்யுங்
குடலைவலிப் பித்துமலங் கொட்டுந் - திடமருந்தைச்
சேதமுறப் பண்ணுந் தியக்கமொடு வாயுவையும்
போத அழைக்கும் புகல்
- பதார்த்த குண சிந்தாமணி
இது வயிற்று உப்பல், பித்தம், கிரகணி, மயக்கம், தாகம், மூலவாயு இவற்றை உண்டாக்கும்; நல்ல மருந்தின் குணத்தை முறித்து விடும்