மொச்சைக்கொட்டை - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
அனிலபித்த ஐயம் அனைத்தையும்உண் டாக்குந்
தொனியெடுக்க வாயுவினைத் தூண்டுந் - தனிவேள்
குனிக்குஞ் சிலைப்புருவக் கோதையே நாளும்
இனிக்குமொச் சைக்கொட்டை யே
- பதார்த்த குண சிந்தாமணி
இனிப்புள்ள மொச்சைக்கொட்டையானது முத்தோடங்களையும், வாயுவையும் உண்டாக்கும்