தென்றல் தஞ்சமடைந்த உன் மலர்க் கூந்தல்

தென்றலுக்குத் தெளிவில்லை
திசை தெரியவில்லை
மலைதொட்டு மடுதொட்டு
நதி அலையோடு ஆடி
இலையுடன் மலர்க்கொடியுடன் ஆடி
அலுத்துச் செலுத்து
இறுதியில்
உன் மலர்க்கூந்தலில் தஞ்சமடைந்து
தழுவி மகிழ்ந்தது
முல்லைக்கு தேர் கொடுத்தான்
அன்று வள்ளல் பாரி
முல்லைமலர்க் கூந்தல் தென்றலுக்கு நல்கிய
வள்ளல் இன்று நீ