தனி மரக்கன்று

தென்றலின் தீண்டல் கூட
தேகத்தை உலுக்கி செல்லுது
வாழ்ந்திட வானம் நோக்கி நிமிர்கிறேன்
வீழ்ந்துடுவேன் என்ற பயத்தை மறைத்தபடி
தடுமாறும் கால்களுக்கு தெம்பூட்டி
திடமாய் தடம் பதித்து நிற்கிறேன்
ஆதரவு வேண்டி நிற்கும் என்னிடம்
ஆறுதல் நாடி நாளை வருவர் என்பதால்
தனி மரக்கன்று