விழிநீலத்தில் எழில்புன்னகையில் நீ வர

பொழிலின் அமைதியில் பிரதிபலிக்கும் ஆகாய நீலம்
எழில்செந் தாமரை கதிரொளியில் செம்மடல் விரிக்கும்
சுழலும் அலைவட்டத்தில் தென்றல் நடம்புரியும் காலையில்
விழிநீலத்தில் எழில்புன்னகை யில்நீ வரநான் காத்திருக்கிறேன்

எழுதியவர் : கவின் சாரலன் (23-Jun-22, 10:28 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 58

மேலே