மருத்துவர்தின வாழ்த்துகள்

மருத்துவர் தின வாழ்த்துகள்.
🌺🌺🌺🌹🌹🌹🏵🏵🏵

காண்கின்ற காயங்கள்
காணாத கட்டிகள்!

ஊண் தாக்கும் உயிரிகள்
உதிரத்தின் எதிரிகள்!

நோயென்னும் போர்ப்படை
நொடியினில் பணிந்திட!

தன்னலம் மறுத்தவர்
பிறர்நலம் பேணியே

போரிடும் வீரர்கள்
மருத்துவர் மட்டுமே!

கண்கண்ட
தெய்வங்கள்!
கடவுளின்
பிம்பங்கள்
மருத்துவர் அல்லவா !

உடலினைக் காத்து
உயிரினைத் தேக்கிடும்

மாண்புடை மருத்தவர்
யாவரும் வாழ்கவே!!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (1-Jul-22, 12:53 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 34

மேலே