அவசர சந்திப்பு
மூன்று தினங்கள் காத்திருந்து
இன்றே வாய்ப்பு கிடைத்தது சந்திப்பதற்கு ... .
மரியாதை நிமித்தம்
ஒரு வணக்கம் ..
பார்த்து,
அரை மாதம் கடந்துவிட்டதால்
அப்புறம் என்றதும்
உடன்
வார்த்தைகள் வரவில்லை..
எதில் ஆரம்பிக்க என்பதில்
சின்னதாய் குழப்பம்
உங்களையே பேச விட்டு பின் தொடர்கிறேன்,,
பேச்சுகள் தொடர வழியில்லை...
கேள்விகளும் பதில்களின்றியே திரும்பி வந்தன
முழுமை பெற்றதாக தோன்றவில்லை
அலுவலகத்திற்கும் வாகனத்திற்கும்
இடையிலான
அவசர சந்திப்பு...
அன்புடன் ஆர்கே..