தோநாத்

மூத்த பையன் பேரு என்னடா தம்பி?


நம்ம தமிழ்ப் பெருங்குடி மக்களின் வழக்கப்படி என் மூத்த பையனுக்கு 'ஏக்நாத்'னு பேரு வச்சுட்டேன். அவனுக்கு இப்ப வயசு இரண்டு ஆகுது.
என் மனைவி அமிர்தவர்சினிக்கு இரண்டாவது மகப்பேறிலயும் ஆண் குழந்தை பிறந்திருக்கு‌. இரண்டாவது குழந்தைக்கு என்ன பேரு வைக்கிறதுன்னு தெரியாம குழப்பத்தில் இருக்கிறேன் அண்ணே.

தமிழ்ப் பேரை வச்சு மெத்தக் கற்ற தமிழர்களே கேவலமாப் பேசுவாங்க. இந்தி அல்லது வேறு மொழிப் பேரை வச்சத்தான் மதிப்பு, மரியாதை. அதனால்தான் குழப்பம்.


குழப்பம் என்னடா குழப்பம்? மூத்த பையன் பேரு 'ஏக்நாத்'னா முறைப்படி இரண்டாவது பையனுக்கு 'தோநாத்'னு பேரு வைக்கறதுதான்டா தம்பி சரி.


ரொம்ப நன்றி அண்ணே. நீங்க பெரிய தீர்க்கதரிசி அண்ணே. 'தோநாத்' ஸ்வீட் நேம் அண்ணே.

@@@@@@@@@@@@@###@#######@@@@@


Eknath = Poet, Saint. Indian origin.
Thonath = Invaluable. Norwegian, French, Egyptian, Dutch, Hebrew, Native American, Greek, Italian, Latin, Norse, Indian, Indonesian, Thai, Scottish, Biblical origin.

எழுதியவர் : மலர் (4-Jul-22, 9:29 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 31

மேலே