துன்பக் குரம்பை யுடையார் குடிபோக்கு நோக்கிக் கவர்ந்துண்ணப் போந்த கழுகு – அறநெறிச்சாரம் 125

நேரிசை வெண்பா
(’ர’ ‘வ’ இடையின எதுகை)

என்புகா லாக இருதோளும் வேயுளாய்
ஒன்பது வாயிலும் ஊற்றறாய்த் - துன்பக்
குரம்பை யுடையார் குடிபோக்கு நோக்கிக்
கவர்ந்துண்ணப் போந்த கழுகு 125

– அறநெறிச்சாரம்

பொருளுரை:

எலும்பையே இரு தூண்களாகவும், இரண்டு தோள்களையும் வேய்ந்த மாடமாகவுமுடைய ஒன்பது வாயில்களிலும் மலமொழுக்குதலை இடையீடின்றிச் செய்கின்ற,

துன்பத்துக்கு ஏதுவான குடிலை (உடலை)யுடையவர்கள் அதிலிருந்து நீங்கியதைப் பார்த்து கழுகுகள் அக்குடிலை பிடுங்கித் தின்ன வந்தன.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Jul-22, 10:06 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே