வெட்ட வெளிவானில் வீண்மீன்கள்

என் வெட்ட வெளிவானில்
வீண்மீன்கள் பூத்ததன்
நோக்கமென்ன,
பால்நிலவும் ஒளிரும்
மாயமென்ன -
வான்தேவதையின்
வரவினால்தானோ,

என் பொட்ட வெளிகாட்டில்
செம்பூக்களும் பூத்ததன்
நோக்கமென்ன,
மலர்வாசமும் மயக்கும்
மாயமென்ன-
வனதேவதையின்
வரவினால்தானோ,

என் இரசனையில்லா இரவில்
புதுகனவுகள் வந்ததன்
நோக்கமென்ன,
விரைந்து பலிக்கின்றதன்
மாயமென்ன-
கனவுக்கன்னியவளின்
அறிமுகம்தானோ.

எழுதியவர் : இ.பொன்ராஜ் (8-Jul-22, 6:05 pm)
சேர்த்தது : இ பொன்ராஜ்
பார்வை : 35

மேலே