முந்திச் செல்லும் பொற்பாதங்கள்
நீந்திச் செல்லும் மீன்விழிகள்
நீர்க்கால் பாதையில் அணை போட்டு,
நீர்ப் பெருக்கு வேளையிலும்
நீங்கிச் செல்லாது நிற்கச் செய்யும்,
சிந்திச் செல்லும் குறுநகைகள்
சிந்தையின் தடத்தில் தடை போட்டு,
சிரம் தடுமாறும் வேளையிலும்
சிந்தனை சிதறாது அளாவச் செய்யும்,
ஏந்திச் செல்லும் பொற்கலன்கள்
ஏறுவெயில் ஒளிக்கு தடை போட்டு,
ஏகவெளி மறுக்கும் வேளையிலும்
ஏகமாய் ஏறெடுத்து பார்க்கச் செய்யும்
முந்திச் செல்லும் பொற்பாதங்கள்
முந்தலின் பாதைக்கு தடை போட்டு,
முசுடியவள் முறைக்கும் வேளையிலும்
மூடனாய் பின் தொடரச் செய்யும்,