கானல்நீரின் தேன்சுவை
கானல்நீரின் தேன்சுவையில்
மூழ்கி திளைக்கச் செய்கிறாய்,
கனகாம்பரத்தின் வாசனையில்
மயங்கி நிற்கச் செய்கிறாய்,
கற்பூரமாளிகையின் வாசலில்
காவல் காக்கச் செய்கிறாய்,
தென்னிமரத்தின் தொட்டிலில்
தினமும் தூங்கச் செய்கிறாய்,
தேய்பிறையின் கடைசிஇரவில்
நிலவொளி காணச் செய்கிறாய்,
விடுகதையின் விடுபட்ட புதிராய்
என்னை நிற்கச் செய்கிறாய்...