பருவம் மீறி மழை

பருவம் மீறிப்
பெய்வதனால்
தரமில்லையோ
மழைநீரதற்கு,

பசியை மீறிப்
புசிப்பதனால்
ருசியில்லையோ
உணவதற்கு,

கரையை மீறிக்
கடந்ததனால்
சிறப்பில்லையோ
முத்ததற்கு,

அளவை மீறிக்
கொடுத்ததனால்
மதிப்பில்லையோ
என் நேசமதற்கு.

எழுதியவர் : இ.பொன்ராஜ் (8-Jul-22, 6:14 pm)
சேர்த்தது : இ பொன்ராஜ்
பார்வை : 58

மேலே