கனிக்கு காத்திருக்கிறேன்

கனிக்கு காத்திருக்கிறேன் நான்
கானக மலரிற்கு விருப்பில்லையோ,
பனிக்கு காத்திருக்கிறேன் நான்
மேலக நிலவிற்கு விருப்பில்லையோ,

விடிக்கு காத்திருக்கிறேன் நான்
வையக சூரியனுக்கு விருப்பில்லையோ,
மழைக்கு காத்திருக்கிறேன் நான்
வானக முகிலுக்கு விருப்பில்லையோ,

நகைக்கு காத்திருக்கிறேன் நான்
தேனக பூவிற்கு விருப்பில்லையோ,
திகைக்கு காத்திருக்கிறேன் நான்
பூலோக தேவதைக்கு விருப்பில்லையோ.

எழுதியவர் : இ.பொன்ராஜ் (8-Jul-22, 6:15 pm)
சேர்த்தது : இ பொன்ராஜ்
பார்வை : 71

மேலே