இரவின் பயணம்

வெண்ணிலவு தேய்வதும்
வளர்வதும் வாடிக்கையானது,
என்னவளும் எனைப் பிரிதலும்
பிரியப்படுதலும் வாடிக்கையாகிறது,

இரவினை மூடிமறைக்க இருள்
யோசித்தல் வேடிக்கையானது,
அவள் நினைவுகளை மூடிமறைக்க
என்மனம் யோசித்தலும் வேடிக்கையானது,

பனிஇரவில் வீசும் குளிர்காற்றின்
வாசம் இனிமையானது,
என் சரீரத்தில் வீசிய அவளின்
வாசம் அதனினும் இனிமையானது,

நீண்ட இரவின் பயணம் விடியலை
நோக்குவதால் முற்றுப்பெறுகிறது,
என் சினத்தின் பயணமும் அவளை
நோக்குவதனால் முற்றுப்பெறுகிறது...

எழுதியவர் : இ.பொன்ராஜ் (8-Jul-22, 6:18 pm)
சேர்த்தது : இ பொன்ராஜ்
Tanglish : iravin payanam
பார்வை : 89

மேலே