குழந்தை❤

1. மோகப் பந்தயம்தனில்
முந்தும் ஒற்றை
வெண்நீர் திவளை,
உருமாறி உருபெற்று
ஒருகொடி பற்றி
நீந்தி வெளியேறி
கூவியழைத்து தன்
வரவை கூறும்
சதைப் பூக்கள்!!!

2. இருமனங் களிடையிலான
மோகக் கவிதையின்
மறுக்க இயலா
சாட்சிப் பத்திரம்!!!

3. வெறுப்பின் உச்சம்
தொடும் வாழ்விலும்,
ஒற்றைப் பார்வையாலேயே
தன்னுள் நிலைதடுமாறி
வீழ்திடும் புதைகுழி!!!

4. இறுதித் துயில்
கொள்ளும் நிலையடைந்த
உதிரிப் பூக்களும்கூட
துயிலாடும் இத்
தொட்டில் பூக்களை
விழியில் இருத்தி
தன்நிலை மறந்து
துயில்வர் ஆனந்தத்தில்...

5. மனிதர்தம் மறக்க
இயலா மற்றற்ற
வேதனையை, அகக்
கல்லறையி லிட்டு
அவர்தம்துயர் துடைக்கும்
உயிர்ப் பூக்கள்...

6. அவனியின் மனிதர்
குலம்யாவும் தம்
அகம் காணும்
ஒற்றை உயிர்க்கண்ணாடி!!!

7. இருவண்ண மலர்களின்
சல்லாப சங்கமத்தினால்
வெண்நிற முத்துக்களை
சிந்தாமல் சிதறாமல்
அள்ளிப்பருகி அவதரித்த
தேன்சிட்டு!!!

எழுதியவர் : கவி பாரதீ (8-Jul-22, 10:17 pm)
பார்வை : 2075

மேலே