ஓடி உயர்த்து
தேமா. தேமா. கூவிளம். கூவிளம். புளிமாங்காய்
கலித்துறை
தேமா தேமா கூவிளம். தேமா. புளிமாங்காய்
பாரு மிங்கே வந்தவ ரெல்லாம் புலவன்போல்
யாரும் கேட்கா பாட்டென தென்றான் கிறுக்கித்தான்
ஈரு யிர்சொல் எக்கவி தையு மிலக்கணமும்
யாரும் யாப்பு பாட்டெழு ஓடி உயர்தப்போ
எழுத்துத் தளத்தில் நூறு பேர் வந்தால் நூறுபேரும் கவிஞரென
கண்டதை கிறுக்கி த் தள்ளுகிறார் காதல் காதல் என்று.
காதலித்தால் அந்தப் பைத்திய உளரலை கொட்டுகிறார்.
அதை கவிதை என்றும் சொல்லி ஏமாற்றுகிறார். ஒருவரை
கவிஞர் என்று பரிமாற்றம் செய்வது இன்னும் வேடிக்கை.
பத்தாயிரம் உளறல் ஒரு இலக்கணப் பாட்டிற்கு இணையாகாது
யாப்பு படித்தேன் என்றவரும் ஒரு கவிதையும் முயற்சி எடுத்து
எழுதுவதில்லை. இந்த மாதம் கிறுக்கியது அதிகம் யார் என்ற
போட்டியில் அள்ளித் தெளிக்கிறார்.........பை
...