மானை நிகர்த்த விழியாள் வருகின்றாள்
மோனைத் தமிழேமுல் லைபோல் விரியாயோ
தேனைச் சொரியும் மலரே சிரியாயோ
மானை நிகர்த்த விழியாள் வருகின்றாள்
மோனைதே னைத்தரு வீர்
---ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
மோனைத் தமிழேமுல் லைபோல் விரியாயோ
தேனைச் சொரியும் மலரே சிரியாயோ
மானை நிகர்த்த விழியாள் வருகின்றாள்
மோனைதே னைத்தருவீர் வள்ளலாய் அள்ளி !
---இப்போது கலிவிருத்தம்
வெண்பாவை பாவினமான விருத்தத்தில் சொல்லத் தேவை இல்லை
ஆயினும் வள்ளலாய் அள்ளி என்ற இரு சீர்கள் அழகு சேர்க்கிறது
என்பதை இலக்கிய ரசிகர்கள் அறிவார்கள்
மோனை எனும் இலக்கண அழகில் கவிதைகள் தொடங்குவதால்
மோனைகளின் அழகுகளும் பெற்று மிளிர்வதை யாப்பறிந்தோர்
அறிவர்