பாட்டனும் பேரனும்

பாட்டனும் பாசமும்
🌹🌹🌹🌹🌹🌹🌹

பிள்ளைகள் சுமந்திடாத் தோள்களும்- அவர்களின் /
கிள்ளைகள் தாங்கிடும் பெருமையில் நிமிர்ந்திடும் !

கண்டிப்பில் சிறந்த தந்தைகள் கூட/
மண்டி இடுவது மழலையர் முன்னே/

பிணங்கும் பாட்டனின் பாசமும் பெரிது /
சிணுங்கும் பெயரனின் சிரிப்போ அமுது !

புதுமைகள் புரிந்திடும் புதியவர் மகிழ்ச்சி !
முதுமையின் கொடுமையை முறித்திடும் நெகிழ்ச்சி!!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (11-Jul-22, 10:26 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 43

மேலே