இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும் /
👍👍👍👍👍👍👍

இதுவும் மெல்லக்
கடந்தே போகும்
எதுவும் நிலைத்திட வாய்ப்பே இல்லை !

இளமையும் அழகும்
முதுமையும் பிணியும்
வளமையும் வறுமையும் வாழ்வுமே
கடந்துபோம் !

முரசும் முப்படை
முதலும் நிலமும்
அரசும் அரண்மனை அனைத்தும்
கடந்துபோம் !

அன்பும் அருளும்
துன்பமும் துயரும்
இன்பமும் புகழும்
இல்லாது
கடந்துபோம் !

பிரபஞ்சம் பூமியும்
ஒருநாள் பிறழ்ந்திடும்
கரங்களில் இக்கணம் வாழ்ந்திடு
மகிழ்வொடு !!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (11-Jul-22, 10:23 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 652

மேலே