நான்நற்ற மிழைப்பேச நன்மையெல்லாஞ் சேருது - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(தேமாங்காய் காய் காய் கூவிளம்)
(1, 3 சீர்களில் மோனை)
தேன்தென்றல் கால்தொட்டுத் தெம்மாங்கு பாடுது;
வான்துஞ்சும் நிலவுவந்து வண்ணமதைக் காட்டுது!
மீன்கள்தாம் துள்ளிவர மின்னலினைக் கூட்டுது;
நான்நற்ற மிழைப்பேச நன்மையெல்லாஞ் சேருது!
- வ.க.கன்னியப்பன்