என் வலிகள் தொடரும் - சகி
பொய்யான காதல்
கண் விழிக்கும்
நிமிடம் முதல்
கண்மூடும் நிமிடம்
வரை உன் நினைவுகள்
தான் என்னில்
அப்போது எல்லாம்....
ஆனால்
உன் காதல்
துரோகத்தை எந்த
நொடி உணர்தேனோ
அப்போது எல்லாம்
அழிந்து விட்டது.....
காதலில்
உண்மையும் நேர்மையும்
உடல் மண்ணை
சேரும் வரை வேண்டும்...
நம்பிக்கை
துரோகமும், பொய்யும்
என்றும் காதலாவதில்லை....
என் மீதான
உன் காதல் வெறும்
பொழுது போக்கு
மட்டுமே.....
இனி உன்னிடம்
உரிமையும் இல்லை..
உணர்வும் இல்லை..
என்னையும்
என் காதலையும்
அலட்சியம் செய்த
உன்னிடம் இனி
எந்த உறவோ, அன்போ
காதலோ, ஊடலோ
இல்லை என் மரணம்
என்னை தழுவும் வரை.....
என்னை உண்மையாக
உயிராக நீ நேசித்திருந்தால்
என்னை விட்டு வேறு ஒருவளிடம்
உறவாடி இருக்க மாட்டாய்.....
அன்றே நானும்,
என் காதலும்
இறந்து விட்டோம்...
இனி என்னிடம்
அன்பையோ, காதலையோ
உரிமையோடு உறவாடாதே....
உன்னைப்போல்
பொய்யாக
என்னால் நடித்து
உறவாடி உயிரோடு
கொலை செய்ய முடியாது....
மனதையும்
காதலையும்....