தாட்சணியம் காட்டுவயே தயவுகொண்டு நீயே - கலிவிருத்தம்

தாட்சணியம் காட்டுவயே தயவுகொண்டு நீயே!
கலிவிருத்தம்
(காய் 3 தேமா)

நாட்குறிப்பை எழுதிவைத்தேன் நாளுமுனைப் பற்றி;
தேட்கொடுக்கைப் போல்நீயும் கொட்டுகிறாய் என்னை!
ஆட்படுத்தும் அன்பொன்றே அற்புதமாஞ் சொன்னேன்;
தாட்சணியம் காட்டுவயே தயவுகொண்டு நீயே!

- வ.க.கன்னியப்பன்

(நான்கடிகளிலும் முதற்சீர் கூவிளங்காய்)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Jul-22, 10:58 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே