கருங்குருவிக் கறி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

வாதகா மாலையறும் மாதே கபமும்போம்
ஊதுகா மாலைவிழுந்(து) ஓடுங்காண் - வாதுசெய்
வந்தகரப் பான்உடனே மாறாச் சொறியும்போங்
குந்து கருங்குருவி கொள்

- பதார்த்த குண சிந்தாமணி

இதனை உண்டால் வாதகாமாலை, விடம், சிலேட்டுமம், கபம் ஊதுகாமாலை, கரப்பான் இவற்றைப் போக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Jul-22, 10:31 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே