அட்சரம் ஐந்துநீ ஓது

அட்சரம் ஐந்து உடையோன் உருத்திர
அட்சர மாலையை மார்பில் அணிந்திடுவான்
அட்சய பாத்திரமாய் அள்ளி வழங்குவான்
அட்சரம் ஐந்துநீ ஓது !

சில பொருள் குறிப்புகள் :
அட்சரம் ஐந்து = நமசிவாய எனும் நாமம்

அட்சய பாத்திரம் --கேட்டதையெல்லாம் தரும்
அபூர்வ பாத்திரம்
சிவன் தான் பிட்சா பாத்திரம் ஏந்துவான் ஆனால்
அன்புடன் அவனை வணங்குவோருக்கு அட்சய பாத்திரமாய்
அள்ளி வழங்குவான் .
அட்சரம் ஐந்துநீ ஓது --நமசிவாய நாமம் நாளும் ஓது

--ஒரு விகற்ப இன்னிசை வெண்பாவில் அமைக்கப்பட்ட
சிவ துதி ,

எழுதியவர் : கவின் சாரலன் (17-Jul-22, 1:24 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 23

சிறந்த கவிதைகள்

மேலே