உயிரைவிட்டு உடல் வாழுமா 555

***உயிரைவிட்டு உடல் வாழுமா 555 ***
உயிரே...
நீயும் நானும்
உடலைவிட்டு பிரியாத...
உயிர் போல
இருப்போம் என்றாய்...
ஒன்றைவிட்டு ஒன்று
வாழப்போவதில்லை என்றாய்...
என்னைவிட்டு உன்னால்
மட்டும் எப்படி முடிகிறது...
நீதான் உயிர் என்று
நேசித்ததால் என்னவோ...
உன் நினைவுகள் வருமுன்னே
கண்ணீர் வந்துவிடுகிறது...
எனக்கும் வலிக்கும் என்று
நீ உணரவில்லையா...
தெரியாமல்
செய்த தவறுதானே...
உள்ளுக்குள் இருந்து
வலி கொடுக்கும் நீ...
எனக்கு முன்னாள்
வரப்போவது எப்போது...
பாதையில்லாத ஆகாயத்தில்
கூட விமானம் செல்கிறது...
நீதான் என் வாழ்க்கை
பாதை என்று தெரிந்தும்...
உன்னை என்னால்
தொடரமுடியவில்லை...
வாய்மூடி அழும்
என் இதயத்தை...
நீயின்றி யாரால்
உணரமுடியும் என் உறவே.....
***முதல்பூ.பெ.மணி.....***