சிதறிய என் காதல் கோட்டை 555

***சிதறிய என் காதல் கோட்டை 555 ***
ப்ரியமானவளே...
நிலையில்லாத உலகில் நீயும்
நானும் நிலையாக இருப்போம்...
நினைத்தது
என் தவறுதான்...
நாம் சேர்ந்து
வாழும் வாழ்க்கைக்காக...
கட்டிய ஆசை கனவுகள் எல்லாம்
எரித்துவிட்டேன் அடியோடு...
உன் நினைவுகள் மட்டும் என்னில்
அணையாமல் கனிந்துகொண்டே இருக்கிறது...
அடைகாக்கும் பறவை போல பார்த்து
பார்த்து காதலை நேசித்தேன்...
சூறாவளியில் சிதறிய
பறவைக்கூடு போல...
உன் ஒற்றை சொல்லால்
சிதறிவிட்டது என் காதல் கோட்டை...
தூறல் இன்றி
நான் நனைகிறேன் கண்ணீரில்...
கல்லாக இருந்த நானும்
உன்னால் சிற்பமானேன்...
இன்று மண்துகளாய்
சிதறிக்கிடக்கிறது என் மனது...
உறங்கும் போதெல்லாம்
இறைவனிடம் வேண்டுகிறேன்...
நாளைய உதயத்தை நான்
காணவேண்டும் என்றே...
ஒரே நாளில் வாழ்க்கையை
முடித்துக்கொள்ள நான் ஈசல் அல்ல...
மண்ணில் விழுந்த விதை
விருச்சமாய் வளர்வேன் நான்.....
***முதல்பூ.பெ.மணி.....***