விரல் தொடும் தூரத்தில் கண்ணீர் மட்டுமே 555

***விரல் தொடும் தூரத்தில் கண்ணீர் மட்டுமே 555 ***
நெஞ்சமானவளே...
என்னருகில்
நீ இருக்கும்வரை...
பிரிவின் வலியை
நான் உணர்ந்ததில்லை...
இன்று என்னைவிட்டு
நீ தூரம் சென்றதும்...
இந்த வலியை
எப்படி சொல்வேன்...
சொல்ல முடியாத
வார்த்தைகளாய் இதயத்தில்...
நான் உணர்கிறேன்
இந்த தூர பொழுதுகள்...
சீக்கிரம்
முடிந்துவிடுமென்று...
நீயில்லாத
பொழுதுகள் அனைத்தும்...
எனக்கு அர்த்தமற்ற
பொழுதுகளாகவே இருக்குதடி...
பொக்கிஷமாக பாதுகாக்க
உன் நினைவுகள் இருக்கிறது...
எனக்குள் இருக்கும்
உன் நினைவுகளை...
யாரால் திருட
முடியும் கண்மணியே...
என் கண்ணின்
கருவிழியாகவே மாறிவிட்டாய் நீ...
நான் காணும் பொருளெல்லாம்
நீயே இருக்கிறாய்...
குறும்பு பார்வையோடு
உதட்டை சுழித்துக்கொண்டு...
நான் சேமித்து
வைத்த காதலை...
செலவு செய்ய
ஆசைகள் இருந்தும்...
நாம் சந்தித்து பேச நேரம்
இல்லையடி கண்ணே...
விழியோரம் கசியும் நீர்
மட்டுமே விரல் தொடும் தூரத்தில்...
மீண்டும் நாம் கைகோர்த்து
செல்லும் நாள் எந்நாளோ...
காத்திருக்கிறேன்
காதலோடு நான்...
என் இதயமானவளே.....
***முதல்பூ.பெ.மணி.....***