ஏன்

"கொட்டும் தேனீதான்
சொட்ட, சொட்ட தேனை
தருகிறது ,

முட்டும் பசுக்கள்தான்
முட்ட, முட்ட பாலை
சுரக்கிறது,

கிட்ட ஒடி வந்து கடிக்கும்
நாய் கூட காவலுக்கு
உதவுகிறது,

ஆனால் இந்த மனித
இனம் மட்டும் ஏன்
முகத்துக்கு நேரே
சிரித்து,
முதுகுக்கு பின்னால்
பள்ளம் பறிக்கிறது?"

எழுதியவர் : (21-Jul-22, 8:12 pm)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : aen
பார்வை : 105

மேலே