துளிர்த்த மரம்
துளிர்த்த மரம்
இலைகள் எல்லாம்
உதிர்ந்து போய்
மொட்டை மரமாய்
நின்றாலும்
இயற்கையுடன்
நாணமும் வெட்கமும்
அடைந்து
கூடலை நடத்தி
இத்தனை
இளந்துளிர்களை
பெற்றெடுத்து
தன்னால் இன்னும்
விருத்தி செய்ய
முடியும்
என்று காட்டியபடி
இளமையுடன்
நிற்கிறதே
இந்த துளிர்த்த மரம்..!