காதல் காதல் காதல் ஒன்றேப் போதும்

காதல் காதல் காதல் ஒன்றே -- போதும்
நோதல் மனதை கொன்ற தில்லையெப் --- போதும்
ஈதலில் இலவசம் யெனக்கு ஈயப் -- போதும்
வேதனை யெனகேன் யெவனு மாளல் -- போதும்


நாட்டைப் பற்றி நானும் எண்ணவில்லை -- ஒருபோதும்
வீட்டைப் பற்றி எண்ணம் வந்ததில்லை --. ஒருபோதும்
ஓட்டை தீயர்க்கு போடவும் மறந்ததில்லை -- ஒருபோதும்
ஆட்சி பொய்மெய் கண்டறி யவில்லை --- ஒருபோதும்

பெற்றோர் பற்றிய பெருமை வேணாங்-- கவலை
மற்றவர் மதத்தை பாது காப்பதே-. கவலை
நற்ற வத்தார் வாழ்வை கெடுப்பதென் -- கவலை
கற்றவர் வாலையு அறுப்பதென் ஒரேஓர் -- கவலை


துடுக்காப் பேசுவ தொழிய எனக்கென் -- வேலை
அடுக்கிப் பேசும் ஆளை தாங்கலென் -- வேலை
சொடுக்கிட அவர்க்கு உயிரை கொடுப்பதென் -- வேலை
எடுத்த இப்பிற வியினில் வேறெது -- வேலை


...?

எழுதியவர் : பழனி ராஜன் (2-Aug-22, 9:55 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 78

மேலே