ப்ப்ரியப்பட்ட டேஷ்

ப்ப்ரியப்பட்ட டேஷ்
===================

பார்த்தாலே உயிர் சுருங்கிவிடும்
உயிர்த்திணையாளுக்கு
உன்னைப் பற்றி
நீ கேட்கிற போதெல்லாம்
ஏதும் சொல்லாமல்
வாய்மூடி இருந்துவிட்டு இப்போது சொல்கிறேன்

ஆனா உனக்குத் தெரியாது
உன்னை சொல்லிக் கொண்டே இருக்க
பூரா வாழ்க்கையிலும்
உன்கூட நா இருக்கணும்னு ..
யாருக்கோ சரியாகத் தெரிகிறாய்..
சில நேரம், அந்த யாருக்கோ
அகங்காரியாகத் தெரிகிறாய்..

உங்கம்மா
இன்னைக்கு உன் பக்கதில இருந்திருந்தா
வீட்ல இல்லாம
சுத்திக்கிட்டே இருப்பான்னு
திட்டிக்கிட்டிருப்பாங்கப் போல
கல்யாணம் பண்ணி
அடைச்சுப் போட்டதால
கூண்டுல இருக்கிற குருவி
ரோட்டுல போறவங்களைப் பாத்து
க்ரீச் க்ரீச் ன்னு கூப்பிடறதைப்போல
வேற வழியில்லாம
என்கிட்ட பேசிக்கிட்டிருக்க இல்லையா ம்ம் :)
அப்பப்போதான் பேசுவ..
அப்டி சிலருக்கு நீ பேசுறது
புரியாமையேப் போகலாம்..
சிலருக்கு அப்டி நீ பேசுறதே தொல்லையாக் கூடத் தெரியலாம்
ஆனா எனக்குமட்டும்
நீ எது பேசினாலும் புடிச்சிருக்கு
அது ஏன் ம்
இதோ இதை சொல்லிட்டிருக்கும்போதே
இதெல்லாம் நிஜம்தான் னு
சொல்றமாதிரி பவர் போகுதுப் பாரேன்...
மனசு சொல்ல
வெளிச்சம் தேவையா என்ன ம்..
இடம் சொல்லாம
எங்கோ போயிட்டாலும்
எங்கப் போய்ட்டான்னு யோசிக்கிறதுக் குள்ள
பின்னால வந்து நின்னு
நா இதோ வந்துட்டேன் ன்னு
என் உள் மூச்சுநெட்ட
கத்தி சொல்லிடுவ ..
உன்னைமாதிரி நீ ஒருத்திதான்
உன்னைமாதிரி பிறவி
ரொம்ப Rare ம்ம்
==================================

ஏதேதோ எனக்கு வாங்கித் தரணும்னு சொல்லி
உதட்டினிடை குறுகிச் சிரிக்க
நீ சொல்லும்போது
வேறென்ன எனக்கு வேணும்
கட்டிப் புரளும்போது
அணிஞ்சிட்ட உன் பச்சைவாசனை,
சிறுவளைந்தாலும்
கூராக இருக்கும் உன்
மூக்குநுனியில்
அம்மென்று மெல்லும் ஒரு முத்தம்
உன் கால்கள்
குறுக சேரும்போது
உன் குழிமடியில் ஒரு தலைசாய்தல்
ஸ்கேன் செய்யும் மின்னல் பார்வை
கன்னம்பதிய
இரு உள்ளங்கை இதம்
போதும் .. போதும்
பெண்கள் எல்லோரும் மென்மைதான்
உன் அமைதிக்குள்
தேன் விதைக்கும் இன்பக் குளிர்ச்சித் தாண்டி
பூக்களைவிட
நீ இத்தனை அதிமென்மையானவளா
என் சிறுமூச்சால்போலும்
அழுத்தாமல் போய்விடுகிறேன்..
உன்மேலே
எனக்கிருக்கும் ஆசையெல்லாம்
வெறும் நப்பாசைதான்
கல்யாணம் பண்ணிக்கலாமா ம்
இதுவும் நப்பாசைதான்
==================================

உன்னையும் என்னையும் கடந்தவர்களின் பெயர்கள், நம் கண்முன்னே ப்ரமாண்டமாய்த்
தெரியத் தொடங்கி, வளைவுகளில்லாத நீளவாட்டில் மெளனப்பட்டு மறைந்துவிட்டன.

இனி ஒரு காதலே வேண்டிடாத வகையில்
இதுவரையான எல்லாக் காதலையும்
உடைத்தெறிந்துவிட்டாய் உன் காதலால்.

""ஒரு கருப்பு ஆப்பிளின் காம்பினிலிருந்து,
வெள்ளைத் தாமரையின் ஐந்தழைகள், தனியிதழாய் விரிந்து, ஒவ்வொன்றும் முகம்‌நோக்காது ஐந்திசையில் பிரிந்திருப்பதைப் போல,
எதையோ இழந்ததாய் எட்டிநோக்கும்போது
மேகங்கள் சிறிது சிறிதாய்ப் பிஞ்சி,
புலர்ச்சொரியும் ஆகசமிட்டாய்மழைப் போல,
ஒரு உறக்கவிடியலில் சபலம் தின்னத்
தோன்றினாய்.""

சில நேரங்களில்
சில ஒற்றைப் படுதல்கள்
சில ஞாபகங்கள்
சில நிமிடங்களில்
சில வார்த்தைகள்
சில முகங்களுடன்
சில பொய் முகங்கள்
சில பைத்தியக் காரத் தனங்களுமாய் நான்
======≠================================

நேசிக்கின்ற ஓர் ஆள்
கைகளில் கோரி எடுத்து
முகத்திலும் தலைமுடியிலும்
தடவி ஆனந்தித்து
செவிகளில்
நாணம் பிறக்கின்ற சொற்களை
மந்தரித்து என
இன்னும் என்னெல்லாமோ தோன்றும்
உன்வசத்தில்
அனுசரணம் அடைகிறபோது
இதெல்லாம்
எங்கேயோத் தோற்றோடுகிறது
உன்னிடமிருக்கும் பக்குவதை
நேர்க்கொள்ளக் கடினமான ஆயுதமாகிறது
எதிர்ப்பார்ப்புகளே அற்றாத
ஸ்நேகார்த்த நருவிதையாகிறது
எப்போதெப்போதும்
இருவரில் மட்டும் நிறைந்திருக்கும்
ஏகாந்த பரிஸ்த்திதி ஆகிறது
புருஷலட்சணம்
தோற்கடிக்கப்படும்
சூனியதையும் அவஸ்த்தையும்
பேராண்மை வதைக்கும்
உத்தமம் போதிக்கிறதுபோல பாவித்து
பின்னொரு
வார்த்தையின் தணலால்
தவறுண்ட போதையாகிறது
குரல்கள் மயங்கி
காமத்தின் ஆதிநாதம்
அங்கங்கிருந்துதான்
அடி சுரக்கிறது

ஏதேதோ பேசுகையில்
ஏன் இத்தனை ஆக்ராந்தம் என்று
கேட்கிறபோது
எல்லாம் மறக்கின்றமுன்னால்
நேசித்திட வேண்டும்
எத்தனை சக்தி விளைப்படும்போதும்
அத்தனை சக்திக்குமேலாக
நேசித்துவிடவேண்டும்..
என்னுடை விரல் நுனிகள்
உன் வசந்தத்தில் பூக்கின்றன
உன்னை மார்போடு சேர்க்கின்ற
என் புருஷத்தனம் காத்து
உனக்கு தாகிக்கிறது
பழுத்து விலகியிருக்கும் கனிகள்
என் இருதயத்தில்
வெளியேற்றம் நடத்தும்போது
எதையும் தடுக்கமுடியாமல்
நீ முழுவதாய் அலும்புகிறாய்
ஆம்.. அதுன்னை பித்துப் பிடிக்கச் செய்கிறது
புணர்ந்து சுவீகரிக்க
உனக்கொரு சரீரம் வேண்டுகிறது
இதெல்லாம்
நீ ஒற்றைக்கல்ல என்று
உனக்குத் தானே தோன்றிவிட ம்

மாறாத வாசனைகளுடன்

பூக்காரன் கவிதைகள் (அனுசரன்)

எழுதியவர் : பூக்காரன் கவிதைகள் (2-Aug-22, 11:39 am)
பார்வை : 85

மேலே