பெற்றேன்மற்று ஈண்டே துறக்கம் திறப்பதோர் தாழ் – அறநெறிச்சாரம் 143

நேரிசை வெண்பா

நின்னை யறப்பெறு கிற்கிலேன் நன்னெஞ்சே!
பின்னையான் யாரைப் பெறுகிற்பேன் - நின்னை
அறப்பெறு கிற்பேனேல் பெற்றேன்மற்(று) ஈண்டே
துறக்கம் திறப்பதோர் தாழ் 143

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

நல்ல நெஞ்சே! உன்னைச் சிறிதும் என் வசமாக்கிக் கொள்ள முடியாமல் இருக்கின்றேன்;

இனி உன்னையே வசமாக்கிக் கொள்ளாத யான் மற்றையவர்களை எங்ஙனம் வசமாக்க வல்லவனாவேன்!

உன்னை முற்றிலும் என்வசமாக்கிக் கொள்வேனாயின் துறக்க உலகத்தினைத் திறந்துவிட வல்லதாகிய ஒப்பற்ற திறவுகோலை இம்மையிலேயே பெற்றவனாவேன்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Aug-22, 6:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

சிறந்த கட்டுரைகள்

மேலே