ஆதன் பெருங்களி யாளன் அவனுக்குத் தோழன்மார் ஐவரும் வீண்கிளைஞர் – அறநெறிச்சாரம் 144

இன்னிசை வெண்பா

ஆதன் பெருங்களி யாளன் அவனுக்குத்
தோழன்மார் ஐவரும் வீண்கிளைஞர் - தோழர்
வெறுப்பனவும் உண்டெழுந்து போனக்கால் ஆதன்
இறுக்குமாம் உண்ட கடன் 144

அறநெறிச்சாரம்

பொருளுரை:

அறிவில்லாதவனும் மிக்க மயக்கத்தை உடையவனும் ஆகிய ஒருவனுக்கு ஐம்பொறிகளாகிய நட்பினர் ஐவரும் இடுக்கண் வந்தபொழுது உதவாத உறவினரேயாவர்:

அந்நட்பினர் அறிஞர்களால் வெறுக்கப்படும் தீவினை காரணமாக வருவனவற்றையும் உவகையோடு நுகர்ந்து உடம்போடு எழுந்துபோன மரணத்தின் பின்னர் அவர்களை உண்பிக்கத் தான்பட்ட கடனாகிய தீவினையை அவ்வறிவில்லாதவன் அதனால் வரும் துன்பத்தை மறுமையில் அனுபவத்தே தீர்ப்பவனாவான்.

குறிப்பு:

இதனால் அறிவில்லாதவர்கள் மறுமைக்காகச் செய்து கொள்வது துன்பமேயன்றி இன்பமில்லை என்பது பெறப்பட்டது. ‘உண்ட’ என்பது பிறவினைப் பொருளில் வந்தது!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Aug-22, 6:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

சிறந்த கட்டுரைகள்

மேலே