தானென்ற அகம்பாவம் தலையைத் தூக்கும் - எண்சீர் ஆசிரிய விருத்தம்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)
(1, 5 சீர்களில் மோனை)
தனவந்தன் என்றாலே தனக்குள் என்றும்
..தானென்ற அகம்பாவம் தலையைத் தூக்கும்!
பனைவெல்லம் போல்நெஞ்சம் வைத்தி ருந்தேன்
..பாரினிலே எல்லோர்க்கும் உதவி வந்தேன்!
தினந்தோறும் எளியோரைத் தேடி என்றுந்
..தேவையுள்ள உதவிகளைத் தேர்ந்தே செய்தேன்!
மனசுக்குள் மத்தாப்பூ அன்றும் இன்றும்
..மாந்துகிறேன் என்னுள்ளே நிலையாய் நின்றே!
– வ.க.கன்னியப்பன்