கண்டில் வெண்ணெய் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கண்டி(ல்)வெண்ணெய் மாதேகேள் காந்தி(ப்)பிர தாபமுமாந்
தொண்டையினுள் நீர்க்கட்டு தூரிருமல் - மிண்டிவரு
நீர்க்கடுப்பு மூலத்துள் நீர்க்குத்த லும்போக்கும்
பார்க்குள் அறியப் பகர்

- பதார்த்த குண சிந்தாமணி

கண்டில் வெண்ணெயால் காந்தி, பிரதாபம் இவையுண்டாகும்; தொண்டையின் நீர்க்கட்டு, நீர்க்கடுப்பு இவை நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Aug-22, 6:01 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே