கூகை நீறு - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
கூகைநீற் றால்மாதர் குய்யநோய் வித்திரதி
ஆகமெனும் மார்புநோய் அண்டுமோ - போகமதில்
வீரியமும் உண்டாகும் வீழ்கிருமி நோயோடு
தூரிருமல் ஈளையும்போஞ் சொல்
- பதார்த்த குண சிந்தாமணி
கூகை நீற்றால் யோனி நோய், வித்திரதிக்கட்டி, மார்பு நோய், கிருமிநோய், கோழை இவை போகும்; விந்து விருத்தியாகும்