கடவுள் எங்கே

கடவுள் எங்கே?

உன்னை, உன்னுள்
சிறை பிடிக்கும்
மதங்களை
நீ மறந்து விடு.

அறிவிலார்
வகுத்த
சடங்குகளையும்,
அவர்கள் தம்
கதைகளையும்,
நீ மறந்து விடு.

ஏற்றிவிடு
உன் இதயத்தில்,
மனிதநேயம் என்ற
திருவிளக்கை.

இப்போது பார்
அந்த திருவிளக்கை!
சற்று நன்றாகவே
உற்றுப் பார்!!

காண்பாய் அதனுள்
இறைவனை,
இரு கரம் கூப்பி
உன்னை வணங்கி
நிற்பதை.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (6-Aug-22, 6:58 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : kadavul engae
பார்வை : 91

மேலே